/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு
/
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு
ADDED : ஜன 14, 2025 03:06 AM
சேலம்: சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய ஆருத்ரா தரிசனம் வைபவம் நடைபெற்றது.
சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:30 முதல், 12:00 மணி வரை திருக்கல்யாணம், இரவு, 7:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 12:15 மணிக்கு முருகன் சன்னதி அருகே உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் விடிய, விடிய தொடர்ந்து காலை, 6:00 மணி வரை நடந்தது. ஏராளமானோர் கண்டு களித்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு கிழக்கு ராஜகோபுரம், முன்பாக ஆருத்ரா தரிசன காட்சியும், மூலவர் சுகவனேஸ்வருக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்க கவச சாத்துப்படியும் நடந்தது.9:00
மணிக்கு நடராஜர், சிவ-காமி அம்மன் திருவீதி உலா நடந்தது, 2 வது அக்ரஹாரம் பகு-தியில் உள்ள காசி விஸ்வநாதர், அம்மா பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி உள்பட மாவட்டத்தில் பல்வேறு
சிவலாயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடை-பெற்றது.

