/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நுால் விலையை குறைக்க வேண்டும்கோன் நுால் வியாபாரிகள் வலியுறுத்தல்
/
நுால் விலையை குறைக்க வேண்டும்கோன் நுால் வியாபாரிகள் வலியுறுத்தல்
நுால் விலையை குறைக்க வேண்டும்கோன் நுால் வியாபாரிகள் வலியுறுத்தல்
நுால் விலையை குறைக்க வேண்டும்கோன் நுால் வியாபாரிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 25, 2025 01:10 AM
நுால் விலையை குறைக்க வேண்டும்கோன் நுால் வியாபாரிகள் வலியுறுத்தல்
பள்ளிப்பாளையம்:'நுால் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பள்ளிப்பாளையத்தில் நடந்த கோன் நுால் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பள்ளிப்பாளையம் வட்டார கோன் நுால் வியாபாரிகள் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம், பெரியார் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று நடந்தது. சங்க தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க செயலாளர் சம்பு வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். துணை செயலாளர் பச்சியப்பன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் சக்திவேல் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்த கூட்டத்தில், அனைத்து வகை நுால்களுக்கும் கிலோவுக்கு, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரித்து வருவதால், சங்கம் சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை ரத்ததான முகாம் நடத்தப்படும். இந்த ரத்ததான முகாமில் ஏராளமானோர் பங்கேற்க வைக்க வேண்டும். சங்கத்திற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.