ADDED : ஜூன் 07, 2026 05:05 AM

அ நிறம் | அளவு
ஏற்காடு:ஏற்காடுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் அதிகளவில் வருவர். கடந்த வாரம் கோடை விழா, மலர் காட்சி நடந்ததால் ஏற்காடு களைகட்டியது. கடந்த, 4ல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை சரிந்தது. தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று, காலை முதலே சுற்றுலா பயணியர் வந்தபடி இருந்தனர். அவர்கள் அங்குள்ள படகு இல்லத்தில் பயணச்சீட்டு வாங்கி காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் சூழல் சுற்றுலா, அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
