/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனிமூட்டம், கடுங்குளிர் வெறிச்சோடிய ஏற்காடு
/
பனிமூட்டம், கடுங்குளிர் வெறிச்சோடிய ஏற்காடு
ADDED : ஜன 11, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு : ஏற்காட்டில் நேற்று காலை லேசான வெயில் அடித்தது. மதியம், 1:00 மணிக்கு மேல் ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம்
சூழ்ந்தது.
இதனால், 5 அடி துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். மேலும் கடுங்குளிர் நிலவியதால், உள்ளூர் மக்கள், வெளியே சென்றபோது, ஜெர்கின், ஸ்வெட்டர், குல்லா அணிந்து சென்றனர். மேலும் அண்ணா, ஏரி பூங்காக்கள், படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்கள், சுற்றுலா பயணியர் இல்லாமல் வெறிச்சோடின.