/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுற்றுலா பயணியரால் களைகட்டிய ஏற்காடு
/
சுற்றுலா பயணியரால் களைகட்டிய ஏற்காடு
ADDED : டிச 26, 2024 02:40 AM
ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்-கின்றனர். இரு வாரங்களாக மழை, பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்ததால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் முதல், பள்ளிகளுக்கு விடு-முறை விடப்பட்டது. தவிர நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை. இதனால் நேற்று காலை முதல், ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் வரத்தொடங்கினர்.
அவர்கள், அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தனர். குளிர்ந்த சீதோஷ்ண நிலையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் சென்றனர். குறிப்பாக படகு இல்லத்தில் ஏராளமானோர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஆணைவாரிஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வ-ராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு முட்டல் ஏரி, ஆணை-வாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. நேற்று நீர்வீழ்ச்சி யில் ஏராளமான சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, முட்டல் ஏரியில் உள்ள பூங்-காவை ரசித்தனர்.உயிரியல் பூங்காசேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து பூங்கா வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பூங்-காவில் புதனன்று, 300 முதல், 350 பேர் வருவர். தற்போது பள்ளி மாணவ, மாணவியருக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையால், 936 பெரியவர்கள் உள்பட, 1,320 பேர் வந்தனர். கட்டணமாக, 63,000 ரூபாய் வசூலானது' என்றனர்.அதேபோல் சேலம், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு பகுதி-களில் இருந்து ஏராளமானோர், பூலாம்பட்டி வந்து விசைப்படகு-களில் காவிரி ஆற்றில் பயணம் செய்து விடுமுறை நாளை குடும்-பத்துடன் கொண்டாடினர்.