/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ - சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

ADDED : மார் 15, 2024 03:56 AM
கரூர்: ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற, இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற, (எல்.எல்.ஆர்.,) ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும் பொதுமக்கள் அனுக வேண்டிய நிலை உள்ளது. தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. இந்த முறையில் வெளிப்படை தன்மை இல்லாமல் உள்ளது. இதை தவிர்ப்பதற்காகவும், இ--சேவை மையங்கள் மூலம் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெறவும், விண்ணப்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, 60 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆர்., பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும், இ--சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.