தற்காலிக பட்டாசு உரிமம் பெற அக்., 18க்குள் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு உரிமம் பெற அக்., 18க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 26, 2026 05:34 AM
சேலம்; தீபாவளியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நவ., 8ல் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர், அக்., 18க்குள் விண்-ணப்பிக்கலாம்.
அனைத்து பொது இ - சேவை மையங்களில், விண்ணப்பத்தை இணையதளம் மூலம் பதிவேற்ற வேண்டும். அத்துடன் விண்-ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம், உரிம கட்டணம், 600 ரூபாயை, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற இணையத்தில் செலுத்த வேண்டும்.அதன் ரசீது, பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்-பிடம் பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதி-மொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் அல்லது கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவ-ணங்களை இணைக்க வேண்டும்.
பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்-பிக்கும்படி, கலெக்டர் இளம் பகவத் கேட்டுக்-கொண்டுள்ளார்.
