/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கலைக்கல்லுாரிகளில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
/
அரசு கலைக்கல்லுாரிகளில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
அரசு கலைக்கல்லுாரிகளில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
அரசு கலைக்கல்லுாரிகளில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 17, 2025 01:30 AM
சேலம் :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் அரசு கலைக்கல்லுாரியில், 1,702 இடம், அரசு மகளிர் கல்லுாரியில், 1,044 இடம், ஆத்துார் அரசு கல்லுாரியில், 880 இடம், மேட்டூர் அரசு கல்லுாரியில், 680 இடம், இடைப்பாடி அரசு கல்லுாரியில், 460 இடங்களுடன், 5 அரசு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் கிடையாது.
அரசு, அதன் உதவி பெறும்
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும் கல்வி உதவித்தொகை, இலவச பஸ் வசதிகள் உள்ளன. தற்போது, 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வரும், 27 வரை பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லுாரியில் உள்ள சேர்க்கை உதவி மையங்களில் நேரடியாக விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஒருவருக்கு, 48 ரூபாய், பதிவு கட்டணம், 2 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை டெபிட், கிரடிட் கார்டுகள், நெட் பேங்கிங், யுபிஐ., மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். தகவலுக்கு, வேலை நாட்களில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, 044 - 24343106, 24342911 என்ற
எண்களில் பேசலாம்.
பாலிடெக்னிக்கில் சேர்க்கை
வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் அறிக்கை:
வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கு, www.tnpoly.in என்ற இணைய
தளத்தில், கடந்த, 7 முதல், விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. வரும், 23 வரை விண்ணப்பிக்கலாம். இக்கல்லுாரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் என, 5 துறைகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு, 10ம் வகுப்பு(எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான பதிவு கட்டணம், 150 ரூபாயை, விண்ணப்ப பதிவுதாரர் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பதிவு கட்டணம் செலுத்த தேவை இல்லை.