/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 18, 2024 12:54 AM
சேலம்: மேட்டூர் அணை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024க்கான மாணவ, மாணவியர் சேர்க்கை, ஜூன், 7 வரை நடக்கிறது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க, ஆதார், மதிப்பெண், மாற்று, ஜாதி, முன்னுரிமை கோரினால் அதற்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவை. அதற்காக பயிற்சி மையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய்.
ஆடை தயாரித்தல், எலக்ட்ரீஷியன், பிட்டர், கம்மியர், மோட்டார் வாகன மெக்கானிக், பிரிட்ஜ், 'ஏசி' மெக்கானிக் உள்ளிட்ட தொழில்
பிரிவுக்கு கல்வி தகுதி, 8 - 10ம் வகுப்பு தேர்ச்சி. அதிநவீன தொழில்நுட்ப புது தொழிற்பிரிவான அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பு இயந்திரவியல் தொழில்துறை, ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனர், மேம்பட்ட சி.என்.சி., இயந்திரவியல் ஆகிய தொழிற்பிரிவுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். பயிற்சியில் சேருவோருக்கு இலவச சைக்கிள், சீருடை, பாடநுால், வரைபட கருவி, காலணி, பஸ் பாஸ், மாத உதவித்தொகை, 750 ரூபாய், 6 முதல், 10 வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை, 1,000 ரூபாய் கிடைக்கும். இத்தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

