/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தைகள் நல குழுவுக்கு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
/
குழந்தைகள் நல குழுவுக்கு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் நல குழுவுக்கு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் நல குழுவுக்கு உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 30, 2024 02:46 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தலைவர், உறுப்பி-னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தலைவர், உறுப்பினர்கள், அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இப்பதவி அரசு பணி அல்ல. குழந்தைகள் நலப்பணியில் குறைந்-தது, 7 ஆண்டுகள், முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். குழந்தை உளவியல், மனநல மருத்துவம், மனித உடல் நலம் உள்ளிட்ட தகுதிகளில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருக்க வேண்டும். விண்ணப்ப படி-வத்தை, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 415, கலெக்டர் அலுவலகம், சேலம் - 636001' என்ற முக-வரியில் பெற்றுக்கொள்ளலாம். https://dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கலாம். டிச., 6க்குள் கிடைக்கும்-படி விண்ணப்பிக்க வேண்டும்.