/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மறுவாழ்வு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
/
போதை மறுவாழ்வு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 16, 2025 02:03 AM
சேலம்:சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும் அரசு கூர்நோக்கு இல்லங்களில், போதை பழக்கத்துக்கு அடிமையான சிறார்களை, அப்பழக்கத்தில் இருந்து மீட்டு, மறுவாழ்வு அளிக்க, ஒவ்வொரு கூர்நோக்கு இல்லத்திலும் சிறார்களுக்கான போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படுகிறது.
அதனால் அத்துறையில் அனுபவம் வாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அதற்காக கடந்த, 3 ஆண்டு கால கணக்கு அறிக்கை, அனுபவம், விருப்ப கடித விபரங்கள் அடங்கிய கருத்துருவை வரும், 25 மாலை, 6:00 மணிக்குள், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 415, கலெக்டர் அலுவலகம், சேலம் - 636 001' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

