/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு பயிற்சி
/
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு பயிற்சி
ADDED : நவ 16, 2025 02:03 AM
சேலம்;சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:'தாட்கோ' மூலம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க, அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வு அவசியம். அதற்கான பயிற்சி, 'தாட்கோ' வழங்க உள்ளது.
அதில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 2, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுடையவர்கள், www.tahdco.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். அதற்கு குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 45 நாட்கள் பயிற்சிக்கு, விடுதி வசதி, பயிற்சி கட்டணத்தை, 'தாட்கோ' ஏற்றுக்கொள்ளும்.

