/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரியில் பச்சிளங்குழந்தை வார விழா வினாடி - வினா

ADDED : நவ 16, 2025 02:01 AM
சேலம்;பச்சிளம் குழந்தைகள் வார விழாவை ஒட்டி, சேலம், ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. அதில், 13 செவிலியர் கல்லூரிகளில் இருந்து, 5 அணியினர் பங்கேற்றனர். பச்சிளங்குழந்தைகள் பற்றிய பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. நடுவர்களாக, சேலம் அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் செல்வராசு, சேலம், செயின்ட் போனி ஒயிட் செவிலியர் கல்லுாரி முதல்வர் சண்முகப்பிரியா பங்கேற்றனர். போட்டியில் மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர்.
அதன் நிறைவு விழாவில், கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார். கோகுலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். நிகழ்ச்சி அறிக்கையை, குழந்தைகள் நல செவிலியர் துறைத்தலைவி நாகலட்சுமி வாசித்தார்.வினாடி - வினா போட்டியில், முதல் மூன்று இடங்கள் முறையே, கோவை, பி.எஸ்.ஜி., செவிலியர் கல்லுாரி; சேலம் அரசினர் செவிலியர் கல்லுாரி; கோவை, கே.எம்.சி.ஹெச்., கல்லுாரி அணிகள் பிடித்தன. அந்த அணிகளின் மாணவ, மாணவியருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோகுலம் செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.