ADDED : நவ 16, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்;தலைவாசல் அருகே கவர்பனையில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை கட்டப்பட்டது.
அதேபோல் திட்டச்சேரி ஊராட்சி நல்லுாரில், 11 லட்சம் ரூபாயில், பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது.
இரு கடைகளையும், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், கெங்கவல்லிஎம்.எல்.ஏ., நல்லதம்பி ஆகியோர், நேற்று திறந்து வைத்தனர்.

