/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேடுகத்தாம்பட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
/
வேடுகத்தாம்பட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
வேடுகத்தாம்பட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
வேடுகத்தாம்பட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
ADDED : நவ 16, 2025 01:59 AM
சேலம்;சேலம், வேடுகத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
யில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.
கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும், வட்டார அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பள்ளி வட்டார அளவில் நடந்த போட்டியில், 9 போட்டிகளில் சிறந்த இடம் பிடித்ததாக, விழாவில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள், உள்ளூர் பிரதிநிதிகள் ராஜா, பழனிசாமி, ராம்குமார், விஜயகுமார், குமரவேல், பாலகிருஷ்ணன், பெற்றோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர் ரவீந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். சுமதி பால
கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.