/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயற்கை விவசாயத்தில் கூடுதல் லாபம் பெறலாம்
/
இயற்கை விவசாயத்தில் கூடுதல் லாபம் பெறலாம்
ADDED : செப் 04, 2025 01:47 AM
சேலம், :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் வேளாண் விளை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயன மருந்துகளின் நச்சுத்தன்மை உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, அதிக உற்பத்தி காலங்களில், நம் நாட்டில் தேங்கி உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.
அதனால் விவசாயிகள் அனைவரும், ரசாயன மருந்துகளின் உபயோகத்தை குறைத்து, இயற்கை முறையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள், டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், பெவேரியா பேசியானா, வெர்டிசிலியம், லெக்கானி, பெசிலியோமைசீஸ் போன்ற திரவ உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தி பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தி, சாகுபடிக்கு செலவை குறைத்து அதிக லாபம் பெறலாம். மேலும் மண் வளத்தை பெருக்க தொழு உரம், பஞ்சகாவ்யா, தசகாவ்யா, மீன் அமிலம், மண்புழு உரங்களை பயன்படுத்தி கூடுதல் லாபம் பெற வேண்டும்.