தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வழிப்பறியில் ஈடுபட்டவாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவாலிபர் கைது


ADDED : மே 02, 2025 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிப்பட்டி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த, லாரி டிரைவர் மணிகண்டன், 45. இவர், 2024 நவ. 21ல், சென்னையில் இருந்து கோவை நோக்கி, கெமிக்கல் லோடு ஏற்றி வந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி, பத்தாங்கல்மேடு அருகே லாரியை சாலையோரம் நிறுத்தி இறங்கியபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து மணிகண்டன் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது கார்த்தி, தாஜ்குமார், மயில்ராஜ் என தெரிந்தது. தாஜ்குமார், கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சேலம் அடுத்த தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த மயில்ராஜ், 32, கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us