/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுவனிடம் சில்மிஷம் போக்சோவில் வாலிபர் கைது
/
சிறுவனிடம் சில்மிஷம் போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜன 01, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஜன. 1-
சேலம், தாதகாப்பட்டி பொம்மண செட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர், 47, கார்பென்டர். இவர் இரவு நேரத்தில், ஒரு வீட்டில் புகுந்து அங்கு துாங்கிக் கொண்டிருந்த, 13 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது கூச்சலிட்டு சிறுவன் எழுந்தபோது, சங்கர் தப்பியுள்ளார்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர், அளித்த புகார்படி சேலம் டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தி, சங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விசாரணையில் சங்கருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

