/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது
/
மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது
ADDED : ஜூலை 17, 2025 01:54 AM
மேட்டூர், மதுபானங்களை டூவீலரில் பதுக்கி விற்ற, பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேச்சேரி ஒன்றியம், பொட்டனேரி பஞ்.,ல் பொட்டனேரி, வவ்வால்தோப்பூர் என இரு இடங்களில் மதுக்
கடைகள் உள்ளன. ஆனால், பார் வசதி இல்லை. இதனால், பொட்டனேரி தனியார் இரும்பாலை செல்லும் வழியில், டூவீலரில் ஒரு நபர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாகவும், அப்பகுதியை கடந்து பாரிநகர் செல்லும் மாணவர்கள் பாதிப்பதாகவும் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற மேச்சேரி போலீசார், சட்டவிரோதமாக டூவீலரில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, எறகுண்டபட்டி பெட்டிக்கடை உரிமையாளர் வெங்கடாசலம், 29, என்பவரை கைது செய்தனர்.

