/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
/
புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
ADDED : டிச 24, 2024 07:47 AM
இடைப்பாடி: இடைப்பாடியில் ஸ்கூட்டியில் கடத்தப்பட்ட, நான்கு மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், டோஸ்டி பகுதியை சேர்ந்த ஜெத்தாராம் மகன் ஜாலுராம், 37, இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர், ஸ்கூட்டியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, நேற்று இடைப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் போது, செட்டிஏரி பகுதியில் ஜாலுராமை இடைப்பாடி போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஸ்கூட்டியில் கூல்லிப், வி1, ஹான்ஸ், ஆர்.எம்.டி., உள்ளிட்ட, 34 கிலோ அளவுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ஸ்கூட்-டியை பறிமுதல் செய்ததோடு, ஜாலுராமை போலீசார் கைது செய்-தனர்.