/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழப்பாடி அருகே பைக் திருடி விற்க முயன்ற வாலிபர் கைது
/
வாழப்பாடி அருகே பைக் திருடி விற்க முயன்ற வாலிபர் கைது
வாழப்பாடி அருகே பைக் திருடி விற்க முயன்ற வாலிபர் கைது
வாழப்பாடி அருகே பைக் திருடி விற்க முயன்ற வாலிபர் கைது
ADDED : செப் 17, 2025 01:57 AM
வாழப்பாடி வாழப்பாடி அருகே, பைக் திருடி விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 32, வாழப்பாடி புதுப்பாளையம்
பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த மே, 29 நள்ளிரவு 1:30 மணிக்கு, பேக்கரி முன் அவரது 'ராயல் என்பீல்டு' புல்லட் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று துாங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு பார்த்தபோது, வெளியில் நிறுத்திய பைக் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அங்குள்ள சிசிடிவியில் சோதனை செய்தபோது, மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வாழப்பாடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில், சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்துார் நோக்கி புல்லட் பைக்கில் வந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில், ஓமலுாரை சேர்ந்த கொத்தனார் முரளிதரன், 22, என்பதும், அவர் ஓட்டி வந்த புல்லட் பைக், மூன்று மாதத்திற்கு முன்பு புதுப்பாளையம் பேக்கரியில் திருட்டு போன பைக் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து வாழப்பாடி போலீசார், முரளிதரனை கைது செய்து புல்லட் பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.