ADDED : அக் 28, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில், மொபைல்போனை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.ஆத்துார் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில், மஞ்சுளாதேவி தனது குழந்தையை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். அவரது மொபைல்போன் கடந்த, 25ல், திருட்டுபோனது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் வார்டில் இருந்து, ஒருவர் மொபைல்போன் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.
விசாரணையில், கெங்கவல்லி அருகே, நடுவலுாரை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஹரிஹரன், 28, என்பதும், அவர் மொபைல்போனை திருடிச் சென்றதும் தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

