/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியை கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சி
/
மாணவியை கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 17, 2025 02:10 AM
சேலம்,:சேலம், மின்னாம்பள்ளியை சேர்ந்த, 21 வயது பெண், சேலம், கோரிமேட்டில் அரசு கல்லுாரியில் படிக்கிறார். ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மோகனபிரியன், 19, என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில், மோகனபிரியனை, பெண் நேரில் சந்தித்தார்.
அதற்கு பின், அவருடன் பேசுவதை தவிர்த்ததில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வேதனை அடைந்த மோகனபிரியன், 'கடைசியாக பேச வேண்டும்' எனக்கூறி, நேற்று காலை, சேலம், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வரவழைத்து, அவரை கத்தியால் வயிறு, கழுத்து பகுதியில் குத்தியுள்ளார்.
அங்கிருந்தோர் அவரை பிடிக்க முயன்றபோது, அவரும் தன் கை, கழுத்தில் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சேலம் டவுன் போலீசார், இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'வாலிபரை மாணவிக்கு பிடிக்கவில்லை. அத்துடன் உறவினருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாக கூறி, வாலிபருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்' என்றனர்.