/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ண்ணிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் சிக்கினார்
/
ண்ணிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் சிக்கினார்
ADDED : ஏப் 22, 2025 02:00 AM
பெ
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே, மொபட்டில் சென்ற பெண்ணின், 7 பவுன் தாலிக்கொடியை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த களரம்பட்டி அருகே, வடக்கு ரங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரகுராமன் மனைவி மோகனப்பிரியா, 34. இவர் கடந்த பிப்.,2 இரவு, 9:00 மணிக்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேசன்சாவடி மாட்டு ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், மோகனப்பிரியா கழுத்தில் இருந்த, 7 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபர்களை தேடினர். அதில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செல்லிபாளையத்தை சேர்ந்த சரண், அவரது நண்பர் ஆமோஸ்பெர்னாண்டோஸ் உள்ளிட்டோர் நகையை பறித்து சென்றது தெரிந்தது. இந்நிலையில், நேற்று கூலி தொழிலாளி சரண், 26, கைது செய்யப்பட்டு
அவரிடம் இருந்து, 5 பவுன் தாலி கொடியை பறிமுதல் செய்தனர். அவரது நண்பர் ஆமோஸ்
பெர்னாண்டோஸை போலீசார் தேடி வருகின்றனர்.