ADDED : ஜன 05, 2025 02:01 AM
இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு
தளி,: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், 5 வது மாவட்ட மாநாடு நடந்தது. முன்னதாக, கெலமங்கலம் கணேஷ் காலனியில் இருந்து, நான்கு ரோடு சந்திப்பு வழியாக, மாநாடு நடக்கும் மண்டபத்திற்கு இருசக்கர வாகனத்தில் பேரணி யாக சென்றனர். நகர செயலாளர் மதுகுமார் தலைமை வகித்தார். தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா, மாநில செயலாளர் பாரதி ஆகியோர் பேசினர். மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள், மாணவர்களுக்கு கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில், தலைவர் அன்பு, பொருளாளர் சண்முகம், தளி கவுன்சிலர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி நுாரு நன்றி கூறினார்.