/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
/
பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஏப் 29, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:இடைப்பாடி அருகே செட்டிபட்டியை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ஹரிபாஸ்கர், 26. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் உரக்கடையில், விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
ஹரிபாஸ்கர்,
நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு குள்ளம்பட்டியில் இருந்து தனது வீடு இருக்கும் செட்டிப்பட்டிக்கு, ஹெல்மெட் அணியாமல் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே இடைப்பாடி நோக்கி வந்த ஈச்சர் லாரி, பைக் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தேவூர் போலீசார் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

