ADDED : நவ 07, 2025 12:57 AM
சேலம், இளம்பிள்ளை, அண்ணா நகரை சேர்ந்தவர் நடராஜன், 22. இவர் கடந்த, 30ல், 'யமஹா' பைக்கில், 'ஹெல்மெட்' அணியாமல் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பைக் பின்புறம், மாருதி கார் மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட நடராஜன் படுகாயம் அடைந்தார். மக்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் சாவு
சீரகாபாடி பஸ் ஸ்டாப் அருகே நேற்று காலை, 6:30 மணிக்கு 55 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரிக்கின்றனர்.

