ADDED : நவ 07, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், தாதகாப்பட்டி, சீரங்கன், 4வது தெருவை சேர்ந்த, சீனிவாசன் மகன் சூர்யநாராயணன், 30. பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கடந்த, 4ல், பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால், 20 நிமிடத்தில் அவரது மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' ஆகியுள்ளது. அவர் அலுவலகத்துக்கும் செல்லவில்லை. அவரை கண்டுபிடிக்க முடியாததால், சீனிவாசன் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

