ADDED : ஜன 16, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி உத்தரப்பன் நகர், அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்நதவர் சசிகுமார், 31. மக்களிடம் பழைய நகைகளை வாங்கி விற்று வந்தார். கடந்த ஜூலை, 9ல் அவர் மாயமானார். அவரது தாய் தனம் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம், சசிக்குமாரின் தாயை அழைத்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சசிகுமார், மக்களிடம், 300 கிராம் தங்க நகைகளை வாங்கி, அதை விற்பனை செய்து கொடுக்கவில்லை. வீடு கட்ட வங்கி மூலம், 37 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதற்கும் தவணை செலுத்தவில்லை. நகை கொடுத்தவர்கள், வங்கி ஊழியர்கள் வீட்டுக்கு வந்து சென்றனர். இதனால் சசிகுமார் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

