ADDED : அக் 11, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: தொளசம்பட்டி, ராமகிருஷ்ணனுாரை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன், 30. திருமணமாகவில்லை. தந்தை செய்து வரும் இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் வேலையை, மணிகண்டனும் செய்து வந்தார்.
தொளசம்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள கடையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு மணிகண்டன் வாட்டர் சர்வீஸ் செய்ய, 'பிளக்'கை மாட்டியபோது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டார் என தெரிவித்தனர். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.