ADDED : பிப் 18, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: திருப்பூர் மாவட்டம், வி.வி. செல்வபுரத்தை சேர்ந்த முபாரக் அலி மகன் பர்வேஷ்முஷ்ரப், 23. இவரது நண்பர் சேலம் அம்மா-பேட்டை வித்யா நகரை சேர்ந்த தர்வேஷ் மகன் முகமது ரபீக், 18. இருவரும் நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ். அப்பாச்சி பைக்கில் அயோத்தியாபட்டணத்தில் இருந்து, சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
பைக்கை முஷ்ரப் ஓட்டினார். தனியார் பள்ளி அருகே வந்த போது, நிலை தடுமாறி சாலையில் இருந்த பேரிகார்டு மீது பைக் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயம-டைந்த பர்வேஷ் முஸ்ரப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகமது ரபீக் லேசான காயங்களுடன் தப்பினார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.