/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி
/
சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : டிச 06, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தலைவாசல், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த அழகப்பன் மகன் பூரணபிரசாந்த், 27. தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் கே.டி.எம்., பைக்கில் கோவை புறப்பட்டார்.
இரவு, 10:45 மணிக்கு, சேலம், அம்மாபேட்டை அருகே, குமரகிரிபேட்டையில், உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.