/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
330 சிலிண்டருடன் லாரி மீட்பு கடத்திய வாலிபர் தலைமறைவு
/
330 சிலிண்டருடன் லாரி மீட்பு கடத்திய வாலிபர் தலைமறைவு
330 சிலிண்டருடன் லாரி மீட்பு கடத்திய வாலிபர் தலைமறைவு
330 சிலிண்டருடன் லாரி மீட்பு கடத்திய வாலிபர் தலைமறைவு
ADDED : ஜூலை 23, 2025 01:31 AM
சேலம் :சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ், 50. லாரியில் சிலிண்டர்களை ஏற்றி, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கிறார். முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவருக்கும், சங்கர் கணேஷூக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்தது.
கடந்த, 16ல் சங்கர் கணேஷ், அவரது வீட்டில், 1,007 சிலிண்டர்களுடன் லாரியை நிறுத்தியிருந்தார். செந்தில்குமார், அந்த லாரியை கடத்திச்சென்றார். பின் சங்கர் கணேஷ், அவரிடம் சென்று லாரி, சிலிண்டர்களை ஒப்படைக்கும்படி கேட்டார். அதில், 354 சிலிண்டர்களை மட்டும் திரும்ப வழங்கினார். மீதி சிலிண்டர்கள், லாரியை தர மறுத்தார். இதனால் சங்கர் கணேஷ் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று, நெத்திமேட்டில், லாரி பார்க்கிங் பகுதி
யில் நிறுத்தப்பட்டிருந்த, லாரியை மீட்டனர். அதில், 330 சிலிண்டர்கள் மட்டும் இருந்தன. மேலும் தலைமறைவான செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.