நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், : தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை, சேலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள், வீடுகளில் வேப்பம்பூ, வெல்லம், வாழைப்பழம் கலந்து பச்சடி தயாரித்து, கோவில்களில் சுவாமிக்கு படைத்தனர். ஆண்டின் முதல் நாளாக கருதுவதால் வாழ்க்கையில் வெற்றி தோல்வி உள்ளிட்ட அனைத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ளும்படி, பச்சடி படைத்து சாப்பிடுவதாக தெரிவித்தனர்.
பொன்னம்மாபேட்டையில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தெலுங்கு தேவாங்கர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், கத்தி போட்டு வழிபாடு நடத்தினர்.

