sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்தூர் மக்கள் குறை கேட்க தனி அலுவலகம்: பகுர்தீன் திட்டம்

/

திருப்புத்தூர் மக்கள் குறை கேட்க தனி அலுவலகம்: பகுர்தீன் திட்டம்

திருப்புத்தூர் மக்கள் குறை கேட்க தனி அலுவலகம்: பகுர்தீன் திட்டம்

திருப்புத்தூர் மக்கள் குறை கேட்க தனி அலுவலகம்: பகுர்தீன் திட்டம்


ADDED : அக் 05, 2011 11:40 PM

Google News

ADDED : அக் 05, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்தூர் பேரூராட்சியில் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த புகார்கள் பெற தனி அலுவலகம் அமைத்து செயல்படுவேன் என்று பேரூராட்சி தலைவர் பதவிக்கான சுயேட்சை வேட்பாளர் பகுர்தீன் அலி அகமது தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பகுர்தீன் பேசுகையில் ' நகர் மக்களின் அன்பான ஆதரவே நான் போட்டியிடக் காரணம். அவர்களின் குறைகளை கேட்க தனி அலுவலகம் அமைத்து செயல்படுவேன். வார்டுகளில் காணப்படும் குறைகள் குறித்து மக்கள் எந்நேரமும் புகார் செய்யலாம்.புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்,சுகாதாரம்,ரோடு போன்ற அடிப்படை வசதிகளைமேம்படுத்த முக்கியத்துவம் தரப்படும். தெரு விளக்குகள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு இருள் இல்லாத நகராக திருப்புத்தூர் மாற்றப்படும். தெருவிளக்குகள் இரவு முழுவதும் எரியவும், எரியாத விளக்குகளை உடனடியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தங்கும் அறை, சுகாதாரமான குடிநீர், இலவச நவீன கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். 18 வார்டுகளிலும் சேதமடைந்த சாலைகளை மேம் படுத்தவும், சாலைகள் இல்லாத புதிய குடியிருப்பு பகுதிகளில் புதிய சாலைகள் போடப்படும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் கழிவுநீர் மற்றும் மழை நீரை அகற்ற தேவையான வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். தேங்கும் கழிவுநீரால் அதிகரித்துள்ள கொசுத் தொல்லையை போக்க பாதாளசாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன். மாநிலத்திலேயே முன்னோடி பேரூராட்சியாக மாற்றி, நகராட்சியாக தரம் உயர்த்த பாடுபடுவேன்.' என்றார்.






      Dinamalar
      Follow us