sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கானூர் மணல் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

/

கானூர் மணல் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

கானூர் மணல் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

கானூர் மணல் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜூலை 13, 2011 10:10 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : திருப்புவனம் அருகே கானூரில் மணல் குவாரி துவக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

திருப்புவனம் அருகே கானூரில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் வழங்கிய மனுவில், கடந்த 25 ஆண்டுகளாக மணல் அள்ளுவதால், விவசாய கிணறு, குடிநீர் கிணறுகளில் நீர் ஆதாரம் பாதித்துள்ளது. எனவே, மணல் குவாரியை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்திருந்தனர். அவர்களிடம், சம்பந்தப்பட்ட பகுதியில், அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தரும் வரை துவக்கமாட்டோம் என கலெக்டர் ராஜாராமன் உறுதி அளித்தார்.

ஆனால், கலெக்டரின் உத்தரவுபடி, வருவாய், பொதுப்பணி, கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை.

இதற்கு மாறாக அப்பகுதியில் மணல் அள்ள தேவையான 'பொக்லைன்' இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர். எனவே மணல் அள்ள தடை விதிக்குமாறு, இரண்டாவது முறையாக மனு அளித்தனர். இது குறித்து, மடப்புரம் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சஞ்சீவி கூறுகையில்,''நீர்வளம் பாதிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய, கலெக்டர் உத்தரவிட்டும், கண்டு கொள்ளவில்லை. மணல் குவாரியை நிறுத்தாவிடில், மறியலில் ஈடுபடுவோம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us