ADDED : ஆக 29, 2011 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை:தேவகோட்டையில் இயேசு சபை பள்ளி, கல்லூரிகள் முன்னாள் மாணவர் மன்ற கூட்டம் நடந்தது.ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமை வகித்தார்.மன்ற செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.லியோ தாகூர் முன்னிலை வகித்தார்.ஐகோர்ட் நீதிபதி பேசுகையில், ''பள்ளியில் கற்றுக்கொடுக்கும் ஒழுக்கம் தான் முக்கியம்.
ஒழுக்கம் இருந்தால் உயர்கல்வி தானாக வரும். தடைகளை தாங்கும் மனநிலை, முயற்சி தேவை.,'' என்றார்.மாநில தலைவர் செபஸ்திஎல்ராஜ், சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரபாகரன், பட்டிமன்ற பேச்சாளர் ராமநாதன், மன்ற இயக்குநர் குவால்பர்ட், பொருளாளர் பெரியசாமி, ஆசிரியர் பிரைட், புலவர் ஆரோக்கியஈசாக் பங்கேற்றனர். கிளை தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்கள் அகஸ்டின், மரியதாஸ் ஏற்பாட்டை செய்தனர்.