/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பி.இ., நேரடி 2ம் ஆண்டு "கவுன்சிலிங்' துவங்கியது
/
பி.இ., நேரடி 2ம் ஆண்டு "கவுன்சிலிங்' துவங்கியது
ADDED : ஜூலை 14, 2011 09:12 PM
காரைக்குடி : காரைக்குடி அழப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில், பி.இ.,நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 'கவுன்சிலிங்' நேற்று துவங்கியது.
மாநில அளவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட 489 பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 24,000 இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று, காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் துவங்கியது. காலை 10 மணிக்கு பி.எஸ்.சி., மாணவர்களுக்கான நடந்த 'கவுன்சிலிங்கில்' 53 பேர், பிற்பகல் 2 மணிக்கு மேல் சிறப்பு ஒதுக்கீடு பிரிவின் கீழ் விளையாட்டு வீரர்கள் 19 பேருக்கு அந்தந்த கல்லூரிகளில் சேருவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இன்று( ஜூலை 15): காலை 8 மணிக்கு கெமிக்கல், 10 மணிக்கு டெக்ஸ்டைல் லெதர் பிரிண்டிங், பகல் 12 முதல் ஜூலை 17 வரை சிவில், பிற்பகல் 4 முதல் ஜூலை 22 வரை மெக்கானிக்கல் பிரிவுக்கு 'கவுன்சிலிங்' நடைபெறுகிறது. முதல்வர் (பொறுப்பு) மாலா கூறுகையில், '' அழைப்பு கடிதம் பெற்ற பெரும்பாலான மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். காலி பணியிடம் அதிகம் இருப்பதால் மாணவர்களுக்கு எளிதில் 'சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆக., 6ம் தேதி வரை 'கவுன்சிலிங்' நடக்கிறது,'' என்றார்.