ADDED : ஆக 05, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,- திருப்புவனம் அருகே பசியாபுரத்தை சேர்ந்த முருகேசநாதன் மகன் சதீஷ். உறவுக்கார பெண்ணுடன் ஜூலை 2 அன்று இரவு 7:40 மணிக்கு வன்னி கோட்டை அருகே டூவீலரில் சென்றார்.
எதிரே டூவீலரில் வந்த இரண்டு பேர் வாளை காட்டி மிரட்டி சதீஸ் வந்த டூவீலர் மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர். சதீஷ் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதுார் சுப்பையா மகன் வீரணன் என்ற தவம் 20, நத்தம் அருகே கவறைப்பட்டியை சேர்ந்த திரவியம் மகன் அன்புராஜ் 21 என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து பறித்து சென்ற டூவீலர்,அலைபேசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.