/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் இன்று உயர்கல்வி வழிகாட்டி முகாம்
/
சிவகங்கையில் இன்று உயர்கல்வி வழிகாட்டி முகாம்
ADDED : செப் 13, 2024 05:19 AM
சிவகங்கை: மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டாக உயர்கல்விக்கு செல்லாத பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டி முகாம் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நான் முதல்வர் திட்டத்தின் கீழ் உள்ள உயர்வுக்கு படி என்ற முதற்கட்ட முகாம் இன்று (செப்., 13) சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாக கல்வித்துறை கருத்தரங்கு கூடத்தில் நடைபெறுகிறது. இதில், சிவகங்கை,காளையார்கோவில்,இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு இம்முகாம் நடத்தப்படும். இதில், பல்வேறு துறை அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இது தவிர மாணவர்கள் கல்லுாரியில் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகள், தொழில் படிப்புகள், கல்விக்கடன் வழங்குதல், மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை மற்றும் சலுகை, பிற்பட்ட, மிக பிற்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்ன மாதிரியான உதவித் தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் அளிக்கப்படும்.
மாவட்டத்தில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வி கற்கும் நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இங்கு உயர்கல்விக்கான உடனடி சேர்க்கையும் நடத்தப்படுகிறது, என்றார்.