ADDED : ஜூலை 01, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
குற்றவியல் சட்டங்களில் மத்திய அரசு செய்துஉள்ள திருத்தங்களை ரத்து செய்யக்கோரி 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்கின்றனர். சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி, இளையான்குடி சங்கத்தலைவர் கல்யாணி, காரைக்குடியில் சங்கதலைவர் சேதுராமன், திருப்புத்துாரில் சங்கத்தலைவர் ராஜ்மோகன், சிங்கம்புணரியில் சங்கத்தலைவர் ரமேஷ், தேவகோட்டையில் சங்கத்தலைவர் ஆண்டவர், மானாமதுரையில் சங்கத்தலைவர் பாலமுருகன், திருப்புவனம் சங்கத்தலைவர் சேதுராமச்சந்திரன் தலைமையில் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.