ADDED : ஆக 01, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை எதிரே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவகங்களில் சூடான உணவுப் பொருட்களை பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்க கூடாது என்று உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மதுரை உணவு பாதுகாப்பு பகுப்பாய்வத்தின் மூலம் நடமாடும் ஆய்வக வாகனம் வரவழைக்கப்பட்டு உணவகங்களில் உள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். மருத்துவ கல்லுாரியில் உள்ள கூட்டுறவு சிற்றுண்டி ஆய்வு செய்யப்பட்டது.சிற்றுண்டியில் காலாவதியான சிப்ஸ் பாக்கெட், தக்காளி சாஸ் பறிமுதல் செய்யப்பட்டது. சிற்றுண்டி சமையலறையை துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தியதோடு ரூ. 3000 அபராதம் விதித்தனர்.