நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் : எஸ்.புதுாரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் 100 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை, பேருந்து, இரயில் பயணச்சலுகை உள்ளிட்டநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர்கருப்பசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஜெஸிமாபேகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதாமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.