/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 'தமிழி' பானை ஓடு கண்டெடுப்பு
/
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 'தமிழி' பானை ஓடு கண்டெடுப்பு
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 'தமிழி' பானை ஓடு கண்டெடுப்பு
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 'தமிழி' பானை ஓடு கண்டெடுப்பு
ADDED : ஜூன் 27, 2024 02:18 AM

கீழடி:கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் ' தா ' என்ற 'தமிழி' எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் 13 தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கிடைத்த நிலையில் தற்போது ' தா 'என்ற ' தமிழி ' எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்னும் எழுத்துக்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே ஐந்தாம் கட்ட அகழாய்வின் போது அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் கூடுதல் குழிகளில் அகழாய்வு நடக்கும் பட்சத்தில் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.