/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கூடுதலாக நான்கு குழியில் பணி
/
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கூடுதலாக நான்கு குழியில் பணி
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கூடுதலாக நான்கு குழியில் பணி
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கூடுதலாக நான்கு குழியில் பணி
ADDED : செப் 01, 2024 06:05 AM

கீழடி : கீழடி பத்தாம் கட்ட அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக நான்கு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு நடந்த பணிகளில் சுடுமண் குழாய், பானைகள், மீன் உருவம் பதித்த பானை ஓடுகள், தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
வழக்கமாக ஜனவரியில் தொடங்கி செப்டம்பரில் பணி முடிவடைந்து விடும், இந்தாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் பருவ மழைக்கு ஏதுவாக பணிகளை தொடர தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறியவும் கூடுதலாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
10ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதால் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அகழாய்வு பணி தீவிரம் அடைந்துள்ளன.
சாத்துார் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த தமிழ்த்துறை மாணவ, மாணவியர் கீழடி அகழாய்வு, திறந்த வெளி அருங்காட்சியகம், பொருட்கள் காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றை அறிய களப்பணியாக வந்திருந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே கீழடி அகழாய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி அகழாய்வு எதற்காக நடத்தப்படுகிறது,
அகழாய்வு செய்வதால் ஏற்படும் நன்மை, அகழாய்வு நடைபெறும் விதம், பொருட்களை கண்டறியும் விதம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார்.
நேற்று கீழடி அருங்காட்சியகம், திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.