/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 26, 2025 02:24 AM

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் பள்ளத்துார் அருகே லாரியில் வைக்கோல் ஏற்றிச் செல்வது போல பதுக்கி கடத்திச்செல்லப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பள்ளத்துார் கொத்தமங்கலம் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் வைக்கோல் கட்டின் கீழ் பகுதியில் மூடைகளாக 15 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது.
அரிசி மூடைகளுடன் லாரி டிரைவர் கோட்டையூர் முத்து மகன் பழனிவேல் 43 , உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். எங்கிருந்து எங்கு கடத்தப்பட்டது, தொடர்புடையவர்கள் யார் என மேல்விசாரணை நடக்கிறது.