ADDED : ஆக 23, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் ஈஸ்வரன் 54, கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்தவர் ராமர் 64.
இருவரும் சிவகங்கை- தொண்டி ரோட்டில் டாஸ்மாக் கோடவுன் அருகே சந்தேகப்படும் படியாக நின்றனர். அந்தவழியாக ரோந்து சென்ற மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 8 பைகளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

