/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 17,179 பேர் தேர்ச்சி; மாநில அளவில் சிவகங்கை 2 ம் இடம்

ADDED : மே 10, 2024 11:13 PM
சிவகங்கை : பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 278 பள்ளிகளை சேர்ந்த 17,707 மாணவர்கள் தேர்வெழுதியதில், 17,179 பேர் 97.02 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
இம்மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும், தனியார், மெட்ரிக் பள்ளிகள் என 278 பள்ளிகளில் 8,657 மாணவர், 9,050 மாணவிகள் என 17,707 பேர் தேர்வெழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில் 8,271 மாணவர், 8,908 மாணவிகள் என 17,179 பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஒட்டு மொத்தமாக இம்மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் 97.02 சதவீதம் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மாவட்ட அளவில் உள்ள 278 பள்ளிகளில், அரசு, உதவி பெறும், ஆதிதிராவிடர் பள்ளிகள் 137ல் 67 பள்ளிகளும், அரசு, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 59ல் 27 பள்ளிகள், மெட்ரிக், சுய நிதி பள்ளிகள் 81 ல் 54 பள்ளிகளும், சமூகநலத்துறை பள்ளி ஒன்றும் என 149 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சியை பெற்று சாதனை புரிந்துள்ளது.
மாநில அளவில் 2 வது இடம்
இம்மாவட்டம் 2021 -2022ல் 93.62 சதவீதம் பெற்று மாநில அளவில் ஆறாவது இடமும், 2022 -- 2023ல் 97.53 சதவீதம் பெற்று இரண்டாமிடமும், இந்த ஆண்டு 97.02 சதவீதம் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.