/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை அணை கழிவுகளை அகற்ற வேண்டும் பூர்வீக பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
/
வைகை அணை கழிவுகளை அகற்ற வேண்டும் பூர்வீக பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
வைகை அணை கழிவுகளை அகற்ற வேண்டும் பூர்வீக பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
வைகை அணை கழிவுகளை அகற்ற வேண்டும் பூர்வீக பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2025 03:10 AM
சிவகங்கை: தேனி மாவட்டம் வைகை அணையில் தேங்கியுள்ள கழிவை அகற்றாததால், 1 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும், தண்ணீரை சேகரிக்க கழிவை அகற்ற வேண்டும் என பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை தேக்க 1955 ம் ஆண்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. அதே போன்று முல்லைபெரியாறு அணையில் திறக்கும் தண்ணீரும் இந்த அணையில் சேகரிக்கப்படுகிறது.
71 அடி உயரத்திற்கு அணை கட்டப்பட்டது. இந்த அணையில் 6.8 டி.எம்.சி., தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
ஐந்து மாவட்ட விவசாய, குடிநீர் தேவைக்காக 1955ல் அணை கட்டப்பட்டாலும்,1959 ம் ஆண்டில் இருந்து தான் பாசனம், குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டது.
66 ஆண்டை கடந்தும் அணைக்குள் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றாமல் அரசு விட்டுவிட்டது. தற்போது 71 அடி உயரமுள்ள இந்த அணையின் உட்பகுதியில் 20 அடி ஆழத்திற்கு சகதி தேங்கி, தண்ணீர் தேக்க கூடிய உயரம் 51 அடியாக மட்டுமே உள்ளது. அணையில் 5.8 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. 1 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக, சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், பொது செயலாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர் புகார் கூறினர்.
எல்.ஆதிமூலம் கூறியதாவது: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கடந்த 2010 ம் ஆண்டு எம்.பி.,க்கள் கொண்ட நிலைக்குழு வைகை அணையை பார்வையிட்டு, 20 அடி ஆழத்தில் தேங்கியுள்ள கழிவால் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்க முடியாமல் வீணாகிறது. எனவே ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.100 கோடியில் வைகை அணைக்குள் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வரும் எந்த கட்சியினரும், இத்திட்டத்தை செயல்படுத்தாமல் 15 ஆண்டுகளாக எம்.பி.,க்கள் குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டனர். அணையில் தண்ணீர் இருந்தாலும், அதற்குள் மணல் போக்கி' இயந்திரம் மூலமும் கழிவை அகற்றி, தண்ணீருடன் வெளியேற்றலாம் என்றார்.

