sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் நாளை '‛நீட்' தேர்வு 1844 மாணவர்கள் பங்கேற்பு

/

சிவகங்கையில் நாளை '‛நீட்' தேர்வு 1844 மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கையில் நாளை '‛நீட்' தேர்வு 1844 மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கையில் நாளை '‛நீட்' தேர்வு 1844 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : மே 04, 2024 05:18 AM

Google News

ADDED : மே 04, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நாடு முழுவதும் நாளை 'நீட்' தேர்வு நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 5 மையங்களில் 1,844 மாணவர்கள் எழுதுகின்றனர்.

நாளை (மே 5) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை 557 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இத்தேர்வில் வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 50 வினாக்கள் வீதம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணிக்குள் சென்றுவிட வேண்டும்.

தீவிர சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். மதியம் 2:00 மணிக்கு தேர்வு துவங்கி, மாலை 5:20 வரை நடைபெறும். 'நீட்' தேர்வினை சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி, திருப்புவனம் வேலம்மாள், சிவகங்கை அருகே சுந்தரநடப்பு மான்போர்ட் சி.பி.எஸ்.இ., பள்ளி, சிவகங்கை கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளில் தேர்வு நடக்கிறது.

இந்த 5 தேர்வு மையங்களில் 1844 மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வினை எழுத உள்ளனர். 'நீட்' தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் வசதிக்கென அரசு பஸ் வசதி, உரிய போலீஸ் பாதுகாப்பு வசதி செய்யப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us